ஓய்வு பெற்ற கூடுதல் கலெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்


ஓய்வு பெற்ற கூடுதல் கலெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 8 Sept 2017 2:46 AM IST (Updated: 8 Sept 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கூடுதல் கலெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

வாசிம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருந்தவர் பால்தேவ் ராம்பாவு. இவர் கடந்த 2002–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந்தேதி ஒருவருக்கு சாதகமாக செயல்பட ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் 2002–ம் ஆண்டு நவம்பர் 30–ந் தேதி கூடுதல் கலெக்டர் ஓய்வு பெற்றார். இவர் மீதான லஞ்ச வழக்கின் விசாரணை அங்குள்ள செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணையில், கூடுதல் கலெக்டர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதிபதி கே.கே.கவுர் சமீபத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார். அவர் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கூடுதல் கலெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

ஓய்வு பெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதல் கலெக்டருக்கு தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story