மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கண்டனம்


மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 9 Sept 2017 3:42 AM IST (Updated: 9 Sept 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

பாழடைந்த கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் நேற்று பரிசீலனை செய்தனர்.

மும்பை,

அப்போது, இந்த பிரச்சினையில் மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், ‘‘இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் மாநகராட்சி பதில் அளிப்பதில் தொடர்ந்து கால தாமதம் நீடிக்கிறது. இதனால், பாழடைந்த கட்டிடங்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கோர்ட்டு முடிவு எடுப்பதில் கால தாமதம் ஆகிறது. நாளை மும்பையில் ஏதாவது கட்டிட விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சியும், கோர்ட்டு சரிசமமாக பொறுப்பு ஏற்க நேரிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story