ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 9:19 PM GMT)

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதலி ஜின்னா, துணை தலைவர்கள் சண்முகம், ஜியாவுதீன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story