விருதுநகரில் தி.மு.க. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை


விருதுநகரில் தி.மு.க. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை
x
தினத்தந்தி 13 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-14T00:24:26+05:30)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் தேசபந்துதிடலில் நேற்று தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இப்ராஹிம்ஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம், திராவிடக்கழக மாவட்ட தலைவர் ஆதவன் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story