பாந்திரா ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கல்லூரி ஊழியர் கைது


பாந்திரா ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கல்லூரி ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2017 3:28 AM IST (Updated: 3 Oct 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தில் சம்பவத்தன்று இரவு 21 வயது இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் இளம் பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானங்கம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அந்த வாலிபரை ஓங்கி அறைந்தார். பயந்து போன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அப்போது அவரது அடையாள அட்டையை தவற விட்டு சென்று விட்டார்.

இளம்பெண் அந்த அடையாள எடுத்து சென்று ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அடையாள அட்டையின் மூலம், அந்த வாலிபர் மாகிம் ஆனந்த்நகர் பகுதியை சேர்ந்த முகமது நதீம் சேக் (வயது26) என்பதும், கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story