நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்

இந்தி நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
இந்தி நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தி நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டே வெர்சோவா பகுதியில் வசித்து வருகிறார். இவர் மலையாளத்தில் வெளிவந்த ‘செக்ஸி துர்கா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவிற்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாச கருத்துக்களை பலர் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ள நடிகை இதுபற்றி வெர்சோவா போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணையை சைபர் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றினர்.இதுபற்றி அவர் கூறுகையில், ‘செக்ஸி துர்கா’ படத்தின் தலைப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் எனக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. கோவிந்த் ஜோஷி என்பவர் பேஸ்புக் கணக்கில் ‘ எமன் உனது வாயில் காய்ச்சிய இரும்பை ஊற்றுவார், உன்னுடைய வாழ்க்கை முடிவுக்காக காத்திரு ’ என பதிவிட்டு உள்ளார்.
பலர் எனக்கு எதிராக ஆபாச கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story