பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகன் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகன் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கி உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஜெய்ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்து உள்ளதாம்.

கடலூர்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கி உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஜெய்ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்து உள்ளதாம். இதனை கண்டித்தும், ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் இளஞ்செழியன், சொத்துமீட்புக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் வேலுசாமி, பொதுச்செயலாளர் ரவிக்குமார், வட்டார தலைவர்கள் சீத்தாராமன், ராமச்சந்திரன், குணசேகரன், ரமேஷ், நகர தலைவர்கள் திலகர், முருகன், சத்திரியாஸ், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story