திப்பு ஜெயந்தியையொட்டி குடகில் ஊர்வலம் , போராட்டம் நடத்த தடை
திப்பு ஜெயந்தியையொட்டி குடகில் ஊர்வலம் செல்லவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் தெரிவித்து உள்ளார்.
குடகு,
குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடக அரசு சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் வருகிற 10–ந்தேதி மாநிலம் முழுவதும் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. குடகு மாவட்டத்தில் 3 இடங்களில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திப்பு ஜெயந்தி விழாவையொட்டி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திப்பு ஜெயந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஊர்வலம் செல்லவும், போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்லுபவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story