மும்பை மாநகராட்சிக்கு ரெயில்வே ரூ.366¾ கோடி தண்ணீர் கட்டண பாக்கி
மும்பை மாநகராட்சிக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.366¾ கோடி தண்ணீர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சிக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.366¾ கோடி தண்ணீர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.366¾ கோடி பாக்கிமத்திய, மேற்கு ரெயில்வேக்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. ரெயில்வேக்கு தேவையான தண்ணீரை மாநகராட்சி சப்ளை செய்து வருகிறது. இதில், இவ்விரு ரெயில்வே நிர்வாகமும் மாநகராட்சிக்கு அதிகளவு தண்ணீர் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார். அவருக்கு கிடைத்த தகவலின்படி ரெயில்வே நிர்வாகம் கடந்த 2001–ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.366 கோடியே 78 லட்சம் தண்ணீர் பாக்கி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டி உள்ளது தெரியவந்தது.
அதிகாரி விளக்கம்இதில், மேற்கு ரெயில்வே ரூ.205 கோடியே 74 லட்சமும், மத்திய ரெயில்வே ரூ.161 கோடியே 4 லட்சமும் மாநகராட்சிக்கு தண்ணீர் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது:–
தண்ணீர் கட்டண பாக்கியை கட்டுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பி விட்டோம். அவர்களுக்கு சில சலுகைகள் கூட கொடுத்தோம். ஆனால் ஒரு சில நிர்வாகங்கள் மட்டுமே பாக்கியை கட்டின. சிலர் தொடர்ந்து தண்ணீர் பாக்கியை செலுத்தாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.