திருச்சி வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக திவாகரன் இன்று ஆஜராகிறார்


திருச்சி வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக திவாகரன் இன்று ஆஜராகிறார்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக திவாகரன் இன்று ஆஜராகிறார்.

திருச்சி,

சசிகலா, தினகரன் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் வீடு, அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதே போன்று பணம், தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

திவாகரன் ஆஜர்

இதே போன்று மன்னார்குடியில் உள்ள சகிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 14 கார்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து திவாகரனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்காக திவாகரன் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக உள்ளார்.


Next Story