பெங்களூரு சிறையில் வக்கீல்களுடன் சசிகலா ஆலோசனை
வருமான வரி சோதனை குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா பின்னர் டி.டி.வி.தினகரனுக்கும், விவேக்கிற்கும் வக்கீலிடம் 2 கடிதங்களை கொடுத்து அனுப்பினார்.
பெங்களூரு,
வருமான வரி சோதனை குறித்து வக்கீல்களுடன் பெங்களூரு சிறையில் ஆலோசனை நடத்திய சசிகலா, பின்னர் டி.டி.வி.தினகரனுக்கும், விவேக்கிற்கும் வக்கீலிடம் 2 கடிதங்களை கொடுத்து அனுப்பி உள்ளதாகவும், அதில் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையால் சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சோதனை பற்றிய முழு விவரங்களையும் தமிழ் செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மூலம் அவர் அறிந்து கொண்டார். இந்த நிலையில் சசிகலாவை சிறையில் வக்கீல் அசோகன் உள்பட சில வக்கீல்கள் சந்தித்து பேசினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். வருமான வரி சோதனை பற்றி சசிகலாவிடம் வக்கீல் அசோகன் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
தகவல்களை கவனமாக கேட்ட சசிகலா, 2 கடிதங்களை அசோகனிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அதில் ஒன்று டி.டி.வி.தினகரனுக்கும், மற்றொன்று இளவரசியின் மகன் விவேக்கிற்கும் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதில் சசிகலா குறிப்பிட்டு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story