பெருந்துறையில் உள்ள லாட்ஜில் மின்விசிறியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


பெருந்துறையில் உள்ள லாட்ஜில் மின்விசிறியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Nov 2017 9:45 PM GMT (Updated: 18 Nov 2017 8:33 PM GMT)

பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் மின்விசிறியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை,

தூத்துக்குடி ஜெயராஜ்ரோடு நியூகாலனியை சேர்ந்தவர் ராலீஸ்ராயர். அவருடைய மகன் சனோஞ்தேவ்ராயர் (வயது 32). ஈரோடு மாவட்டம் பெருந்துறை வந்த இவர் கடந்த 15–ந் தேதி மாலை 5 மணி அளவில் பெருந்துறை–ஈரோடு ரோடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். ஆனால் அதன்பின்னர் அவர் வெளியே வரவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு மின்விசிறியில் சனோஞ்தேவ்ராயர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அவர் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சனோஞ்தேவ்ராயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story