சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-23T01:35:40+05:30)

திருவாரூர் மாவட்டத்தில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

திருவாரூர்,

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் சேகர்கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை விலையை குறைத்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தாஜூதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர், நகர அவைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி அசோகன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கொரடாச்சேரி ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அம்மையப்பன் ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாறன், நிர்வாகிகள் லெட்சுமணன், பொய்யாமொழி, நந்தகுமார், பாரதி, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நகர செயலாளர் கணேசன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் சோழராஜன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் மீனாட்சி சூரியபிரகாஷ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், தி.மு.க. தலைமை பேச்சாளர் சோம.இளங்கோவன், முன்னாள் நகரசபை தலைவர் கார்த்திகாஉத்தமன், இளைஞரணி அமைப்பாளர்கள் முருகானந்தம், கோபி, மன்னார்குடி வர்த்தக சங்க செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மன்னார்குடி ஒன்றிய தி.மு.க. சார்பில் மகாதேவபட்டணம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு தலைமை தாங்கினார். மன்னார்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தன்ராஜ், மாவட்ட பிரதிநிதி பாரதிமோகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சிதம்பரம், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகாலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சேகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அதேபோல திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ, ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரகாஷ் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் நகர அவைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம், நகர செயலாளர் சிவநேசன், நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞரனி அமைப்பாளர் முத்துக்குமார், மாணவரனி அமைப்பு செயலாளர் திருக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்தில் ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் விசு.அண்ணாதுரை, நகர செயலாளர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராணிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் அருகே உள்ள முன்னாவல்கோட்டை ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தம், நார்த்தாங்குடியில் முன்னாள் ஒன்றியக்குழு சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் வாழ்க்கை, சன்னா நல்லூர், அச்சுதமங்கலம், பனங்குடி, ஆனைக்குப்பம், முடிக்கொண்டான் ஆகிய பகுதிகளிலும், நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் பில்லூர், பண்டாரவாடை, திருமீயச்சூர், வேலங்குடி, கீரனூர், நெடுங்குளம், பாவட்டக்குடி ஆகிய பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல் ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் அன்வர்பாட்சா, ஒன்றிய பிரதிநிதி சாமிநாதன், அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் தேவநேசன், ராஜேந்திரன், ஜெயராமன், தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் ஆதித்யாபாலு, மாவட்ட பிரதிநிதி சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடவாசல் ஒன்றியத்தில் கூந்தனூர், மருத்துவக்குடி, கூந்தலூர், மஞ்சக்குடி, நெய்குப்பை, சீதக்கமங்கலம் உள்பட 52 இடங்களில் தி.மு.க.வினர் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, மேல்கொண்டாழி, அக்கரைபுதுத்தெரு, பொதக்குடி, திருராமேஸ்வரம், சித்தாம்பூர், தென்கோவனூர், வடகோவனூர், ஓகைப்பேரையூர், பூதமங்கலம், வேளுக்குடி, சித்தனங்குடி, தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், பழையனூர், பெரியகொத்தூர், பாலக்குறிச்சி ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர் ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். ஆதிச்சபுரம் ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. மகாலிங்கம் தலைமை தாங்கினார். பெருகவாழ்ந்தானில் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ் தலைமையிலும், சித்தமல்லியில் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை தலைமையிலும், விக்கிரபாண்டியில் ஒன்றிய அவைத்தலைவர் ராமதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story