மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற ராணுவ வீரர் கைது


மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2017 3:00 AM IST (Updated: 6 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற ராணுவவீரரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ராணுவவீரரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரையை அடுத்த எழுமலை அருகே உள்ளது டி.பாறைப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த நல்லமாரி என்பவரின் மனைவி கனியம்மாள்(வயது 35). இவர் பேரையூர் சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எஸ்.கோட்டைப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரான முருகேஷ்வரன்(21) கனியம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் அருகில் வந்துள்ளார்.

அப்போது திடீரென அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பிய கனியம்மாள் இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட டி.பாறைப்பட்டி கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். ராணுவவீரர் முருகேஷ்வரனை உடனடியாக கைது செய்யக்கோரி எழுமலை–பேரையூர் சாலையில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ், எழுமலை இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் முருகேஷ்வரனை கைது செய்தனர். இதையடுத்து மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story