சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது


சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான்,

மதுரையை அடுத்த சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன்(வயது 45). இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார்.

இவர் ஒரு சிறுமியை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து கடந்த 1–மாதத்திற்கு மேலாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை பார்த்த தென்கரையை சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுனரான மணிகண்டனும்(28) சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லு£ர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின்படி சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குபதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story