‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை


‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2017 3:30 AM IST (Updated: 8 Dec 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பேஸ்புக்’கில் அறிமுகம்

மும்பையை சேர்ந்த பெண் சவுமியா(வயது38). இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் மேக்ஸ் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். அப்போது, தான் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிப்பதாக கூறினார். புற்றுநோயால் தனது தாய் மற்றும் மனைவியை இழந்துவிட்டதாக கூறிய அவர், தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் புற்றுநோயாளிகளுக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கும் அனுப்பி உள்ளதாக அவர் அண்மையில் சவுமியாவிடம் கூறினார்.

ரூ.4 லட்சம் மோசடி

இந்தநிலையில், சவுமியாவுக்கு போன் செய்த அந்த நபர் தான் அனுப்பி வைத்த மருந்து பொருட்கள் சுங்கவரி பிரச்சினை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் முடக்கி வைத்திருப்பதாகவும், அதற்காக ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே தான் கூறும் வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்தி உதவி செய்யும்படியும், பின்னர் அந்த பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சவுமியா அவர் கூறிய வங்கிக்கணக்குகளில் ரூ.4 லட்சத்தை செலுத்தி உள்ளார். அதன்பின்னர் மேக்சை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சவுமியா சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story