ஒன்னள்ளி அருகே காட்டு யானை தாக்கி 3 விவசாயிகள் படுகாயம்
ஒன்னள்ளி அருகே காட்டு யானை தாக்கி 3 விவசாயிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவமொக்கா,
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சன்னகிரி தாலுகா தாகினகட்டே கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களை மிரட்டி வந்த 3 காட்டு யானைகள், நேற்று காலை ஒன்னள்ளி தாலுகா பெனகனஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
அப்போது அந்த யானைகள், வாழை, பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தின. அந்த சமயத்தில், அந்த தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளான பெனகனஹள்ளியை சேர்ந்த நாகராஜ், தம்மரகட்டே கிராமத்தை சேர்ந்த ருத்ரபாய், தேவரஒன்னி கிராமத்தை சேர்ந்த பர்மப்பா ஆகிய 3 பேரும், காட்டு யானைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.அப்போது அவர்களை கவனித்த ஒரு காட்டு யானை, 3 பேரையும் பின்தொடர்ந்து விரட்டி சென்று தாக்கியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து, தீப்பந்தங்களை காண்பித்தும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதையடுத்து அவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒன்னள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Related Tags :
Next Story