ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் ஜவுளி வியாபாரி கைது

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் ஜவுளி வியாபாரி கைது
x
தினத்தந்தி 17 Dec 2017 10:30 PM GMT (Updated: 17 Dec 2017 8:56 PM GMT)

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் ஜவுளி வியாபாரி கைது

இளம்பிள்ளை,

சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 29), ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கும், இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி வெங்கடேசன் (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெங்கடேசன், குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக குமார் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியதம்பி வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தார்.

Next Story