பிரதமர் மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் எடுபடாது: காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது
பிரதமர் மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது என்றும், காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது என்றும் மந்திரி யு.டி.காதர் கூறினார்.
மங்களூரு,
பிரதமர் மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது என்றும், காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது என்றும் மந்திரி யு.டி.காதர் கூறினார்.
வெற்றி வாகை சூடும் மாநிலமாக....மங்களூருவில் கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றி சமூக வலைத்தளங்களில் பெரிய சாதனையாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றியால் அடுத்த ஆண்டு(2018) கர்நாடகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறப்பட்டு வருகிறது.
குஜராத், இமாசல பிரதேச தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதற்கும் கர்நாடகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது.
ராஜதந்திரங்கள் எடுபடாதுஉண்மையை சொல்ல வேண்டும் என்றால் குஜராத்தில் பா.ஜனதா தோல்வி தான் அடைந்து உள்ளது. காங்கிரஸ் அருகில் நெருங்கி வந்து தான் தோல்வியை தழுவியுள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது. இல்லாவிட்டால் கண்டிப்பாக பா.ஜனதா குஜராத்தில் வெற்றி பெற்று இருக்காது. அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் இங்கு எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.