பாளையங்கோட்டையில் நடந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலையில் 2 பேரிடம் விசாரணை


பாளையங்கோட்டையில் நடந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலையில் 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 7 Jan 2018 2:00 AM IST (Updated: 7 Jan 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நடந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் நடந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் உரிமையாளர்

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற மோட்டார் முருகன் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கமி‌ஷன் அடிப்படையில் மணல் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு சென்று கொண்டு இருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

2 பேரிடம் விசாரணை

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்–இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தினேஷ், சிவபெருமாள் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலீசார் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்து இந்த கொலை சம்பவத்தை நடத்திவிட்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனால் அந்த வீடியோ காட்சியில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story