குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2018 2:00 AM IST (Updated: 10 Jan 2018 9:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விற்பனையாளர்

தூத்துக்குடி டி.எம்.பி. காலனி 6–வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் பொன்ராஜ்(வயது 26). இவர் தூத்துக்குடி அண்ணாநகரில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 6–ந் தேதி அவர், நெல்லைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு தனது காரை எடுத்து சென்றாராம். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே அவர் காருக்குள் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொலை வழக்கு

அப்போது, அவர் பிணமாக கிடந்த காரில் இருந்து 2 பேர் இறங்கி செல்வது தெரியவந்தது. மேலும், அவருடைய உடல் பரிசோதனையில், குரல்வளையில் காயம் இருப்பதாகவும், ஆனாலும் உடல் உள்உறுப்புகள் பரிசோதனை விவரம் வந்த பிறகே அவர் எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தென்பாகம் போலீசார் ஏற்கனவே அவர் மாயமானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா?, காரில் இருந்து இறங்கி சென்றவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story