தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க தடை நீங்கியது ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க தடை நீங்கியது ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2018 2:15 AM IST (Updated: 25 Jan 2018 7:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தனியார் துப்புரவு பணியாளர்களை நியமிக்க தடை நீங்கியதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தனியார் துப்புரவு பணியாளர்களை நியமிக்க தடை நீங்கியதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

திடக்கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016–ன்படி சுற்றுச்சுழல் மாசுபடுதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், மண்வளம் காத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அன்றாடம் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மறுசுழற்சி குப்பைகள் என பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளை கொண்டு ஆங்காங்கே இயற்கை உரம் தயாரிக்கவும், தயாரிக்கப்படும் உரத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தடை நீங்கியது

இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான பல்வேறு நிலை பணியாளகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுமார் 600 பேர் தனியார் வெளிக்கொணர்வு முகமை(அவுட்சோர்சிங் ஏஜென்சி) மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தனிநபர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஒப்பந்தப்புள்ளி கோர இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, தடை உத்தரவை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதனால் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story