ஸ்ரீமுஷ்ணத்தில் மாணவர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதலை சிறுத்தைகள் மனு


ஸ்ரீமுஷ்ணத்தில் மாணவர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதலை சிறுத்தைகள் மனு
x
தினத்தந்தி 4 Feb 2018 3:15 AM IST (Updated: 4 Feb 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் கொழைசாவடி குப்பம் காலனியை சேர்ந்தவர்கள் மீது சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் கடலூர் நகர செயலாளர் செந்தில், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் புதியவன், திருவரசு, மாவட்ட துணை செயலாளர் திருமேனி, ஒன்றிய செயலாளர்கள் இளம்வழுதி, திருஞானம் உள்பட கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

ஸ்ரீமுஷ்ணம் கொழைசாவடி குப்பம் காலனியை சேர்ந்தவர்கள் மீது சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் கார் கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். தற்போதும் அவர்கள் ஆதிதிராவிட மக்களையும், மாணவர்களையும் தாக்கி வருகிறார்கள். இதனால் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு, அவர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story