வேலை வாய்ப்பு குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு
பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
கோலார் தங்கவயல்,
காங்கிரசார் இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோலார் மாவட்ட காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேலை வாய்ப்பு குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
கோலாரில் உள்ள அரசு கல்லூரி அருகில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரின் உருவப்பொம்மையை சாலையில் போட்டு எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முன்னதாக காங்கிரசார் பயணியர் விடுதியில் இருந்து கல்லூரிக்கு ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் பெனிட்டோ, முன்னாள் எம்.எல்.சி. சுதர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.