பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 36 பேர் கைது


பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 36 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திரமோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் பக்கோடா விற்கும் போராட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

நாகர்கோவில்,

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி பேட்டி அளிக்கையில், ‘பக்கோடா விற்றால் தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம்‘ என்று தெரிவித்தார். வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் பக்கோடா விற்கும் போராட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. டதி பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன் நடந்த இந்த போராட்டத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தென் மண்டல தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், ரெஜிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக 6 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story