திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்


திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 18 Feb 2018 10:15 PM GMT (Updated: 18 Feb 2018 7:44 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பார்வை திறன், நிமோனியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தாக்கத்தில் இருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஊட்டச்சத்துமிக்க இந்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது.

அனைத்து கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பு ஊசி பணிகள் மேற்கொள்ளப்படும் மையங்களில், இந்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில்...

6 மாதம் முதல் 1 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ‘ஏ’ திரவம் 1 மி.லி. அளவுக்கும், 1 வயதுக்கு மேல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2 மி.லி. அளவுக்கும் வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 464 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 88ஆயிரத்து 462 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 926 குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அருகில் உள்ள மையத்திற்கு அழைத்து சென்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story