பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்


பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:00 AM IST (Updated: 19 Feb 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணம்,

புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் பிரிதிவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உத்திராபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தமிழக அரசு பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். தஞ்சை- விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கல்லூரி ஆற்றங்கரை தெருவில் சாலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு வழிப்பாதை

கும்பகோணம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதைகளை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். 
1 More update

Next Story