கவுரி லங்கேஷ் கொலை: 2 பேரிடம் விசாரணை


கவுரி லங்கேஷ் கொலை: 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 24 Feb 2018 4:40 AM IST (Updated: 24 Feb 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக 2 பேரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5–ந் தேதி மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக ராஜராஜேஸ்வரி போலீசார் வழக்குப்பதிவு உள்ளனர். மேலும் இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன், மஞ்சுநாத் என்கிற மஞ்சா ஆகிய 2 பேரை பிடித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Next Story