வாலிபர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது


வாலிபர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 2:45 AM IST (Updated: 25 Feb 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பாரதிநகர், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

காரைக்குடி,

காரைக்குடி பாரதிநகர், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 35). இவருக்கு சொந்தமான இடத்தை பக்கத்து வீட்டை சேர்ந்த சொர்ணம்(70) என்ற முதியவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதனை ரமேஷ்குமார் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சொர்ணம் மற்றும் 4 பேர் சேர்ந்து ரமேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து சொர்ணத்தை கைது செய்தனர்.


Next Story