திருட்டு வழக்கில் வாலிபர் கைது 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தார்வார் டவுனில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிளில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தது.
உப்பள்ளி,
தார்வார் டவுனில் உள்ள போலீஸ் நிலையங்களில் இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. இதனால், திருட்டு வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துணை போலீஸ் கமிஷனர் ருத்ரப்பா தலைமையிலான போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் ஜன்னத் நகரை சேர்ந்த ரம்ஜான் சாய் (வயது 24) என்பதும், அவர் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் தார்வார் டவுனில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.