ஜெயலலிதா பிறந்தநாள் விழா


ஜெயலலிதா பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 26 Feb 2018 3:15 AM IST (Updated: 26 Feb 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. விழாவுக்கு காமராஜ் எம்.பி., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேல் பாபு, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு வரவேற்றார்.

விழாவுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

முன்னதாக கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் மற்றும் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யப்பா, அரசு, சுப்பு, பழனி, அருணகிரி, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனுவாசன், மாவட்ட பொருளாளர் வக்கீல் வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஞானவேல் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தியாகதுருகம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கலையநல்லூர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், நீலாவதி கதிர்வேல், தியாகை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசி குமரவேல், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குமரவேல், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பரியாஸ், மாவட்ட பிரதிநிதி வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொட்டையூர், வேங்கைவாடி, நாகலூர், விருகாவூர் ஆகிய கிராமங்களிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Story