மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மீண்டும் வனப்பகுதியாக மாற்றக்கூடாது காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மீண்டும் வனப்பகுதியாக மாற்றக்கூடாது என நெல்லையில் நேற்று நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, ரவி அருணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அம்பை தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த தேயிலை தோட்டத்தை மீண்டும் வனப்பகுதியாக மாற்றக்கூடாது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து பழிவாங்கிய பாரதீய ஜனதா கட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
நெல்லை–தென்காசி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.
அரசு வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்த மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணியை தொடக்க வேண்டும்.
நெல்லை மக்களின் நீண்ட கால கோரிக்கையான, நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும். சேரன்மாதேவி, களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்செல்வன், நெல்லை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.பி.துரை, நிர்வாகிகள் சிவன்பாண்டி, ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், காமராஜ், விவேக்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story