தாதாவை வைத்து மிரட்டியதாக புகார்: சினிமா தயாரிப்பாளர் கைது


தாதாவை வைத்து மிரட்டியதாக புகார்: சினிமா தயாரிப்பாளர் கைது
x
தினத்தந்தி 7 March 2018 9:53 PM GMT (Updated: 7 March 2018 9:53 PM GMT)

தாதாவை வைத்து மிரட்டிய புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த இந்திப்பட நடன இயக்குனர் ரேமோ டிசோசா. இவருக்கும் சினிமா தயாரிப்பாளர் சத்யேந்திர தியாகி என்பவருக்கும் ரூ.5 கோடி தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் பிரபல தாதா ரவி புஜாரியை வைத்து ரெமோ டிசோசாவை மிரட்ட வைத்த புகாரின்பேரில், போலீசார் சினிமா தயாரிப்பாளர் சத்யேந்திர தியாகியை கைது செய்தனர்.


Next Story