ஆரணி அருகே துரித உணவகத்தில் 1,296 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


ஆரணி அருகே துரித உணவகத்தில் 1,296 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே துரித உணவகத்தில் 1,296 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த இரும்பேடு அரிகரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சையத்பாபு. இவருடைய மகன் சையத்பாஷா (வயது 23). இவர் ஆதனூர் கூட்ரோடு அருகே சிக்கன் பக்கோடா மற்றும் துரித உணவகம் (பாஸ்புட்) நடத்தி வருகிறார்.

இவரது கடையில் வெளிமாநில மதுபாட்டில்கள் மலிவு விலையில் விற்பதாக ஆரணி தாலுகா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் துரித உணவகத்துக்கு சென்று திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 1,296 வெளிமாநில மது பாட்டில்களையும், சையத்பாஷா பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சையத்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவருக்கு வெளிமாநில மதுபாட்டில்களை வினியோகம் செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த குமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story