முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். உதவிக்கு வராத கடலோர காவல் படை மீது மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்தவர்கள் அபூபக்கர் சித்திக் (வயது35), சாகுல்அமீது (30), அசாருதீன்(25), முகமது உசேன்(20). மீனவர்களான இவர்கள் 4 பேரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் கோரையாறு வழியாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
4 பேரும் நடுக்கடலில் படகில் இருந்தபடி கடலில் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென பலத்த காற்று வீசியது. ராட்சத அலைகளும் எழுந்தன. திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் படகின் என்ஜின் பழுதடைந்தது. இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த 4 பேரும் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர்.
காற்று வீசும் திசைக்கு ஏற்ப கடலுக்குள் படகு இழுத்து செல்லப்பட்டது. ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த 4 பேரும் உடனடியாக கடலோர காவல் படைக்கு “1093” என்ற எண் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆனால் கடலோர காவல் படையினர் உதவிக்கு வரவில்லை. பலமுறை தொடர்பு கொண்டு பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் தங்களுடைய உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆசாத் நகரை சேர்ந்த குறிஞ்சி, முகமது யூனூஸ், மீராமுகைதீன், இர்ஷாத் அலி ஆகியோர் வேறு ஒரு படகில் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தத்தளித்த படகை கண்டுபிடித்தபோது அபூபக்கர் சித்திக் உள்பட 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து 4 பேரையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் 4 பேரும் நலம் அடைந்தனர். 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீனவர்கள் மீட்கப்பட்டதால் ஆசாத்நகர் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகி மீராமுகைதீன் கூறியதாவது:-
கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் வலை கடலில் மாயமாகி விட்டது. 8 மணி நேரம் போராடி மீனவர்களை கரைக்கு கொண்டு வந்துள்ளோம்.
கடலோர காவல் படையினரின் அவசர உதவி எண் 1093-க்கு பலமுறை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அதிர்ஷ்டவசமாக செல்போன் சிக்னல் கிடைத்ததால் மீனவர்கள் 4 பேரையும் மீட்க முடிந்தது. தகவல் தெரிவித்த பின்னரும் உதவிக்கு வராத கடலோர காவல் படையினர் மீது மீனவர்கள் அதிருப்தியில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story