எரியோட்டில் 5½ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நெல்லை-ஈரோடு ரெயில், நிலைய அலுவலரை பயணிகள் முற்றுகை


எரியோட்டில் 5½ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நெல்லை-ஈரோடு ரெயில், நிலைய அலுவலரை பயணிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2018 3:30 AM IST (Updated: 1 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

சுங்கப்பாதை அமைக் கும் பணிக்காக நெல்லை- ஈரோடு ரெயில் எரியோடு ரெயில் நிலையத்தில் 5½ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் நிலைய அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டிற்கும்-பாளையத்துக்கு இடையே திண்டுக் கல்-கரூர் ரெயில் தண்டவாளத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக பாறைகள் வெடி, வைத்து தகர்க்கும் போது ரெயில் பாதை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் மதியம் 1 மணிக்கு எரியோடு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. ஆனால் தண்டவாளம் சேதமடைந்ததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

மாலை 6½ மணிவரை ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் ரெயிலில் வந்த பயணிகள் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், எரியோடு ரெயில் நிலைய அலுவலகத்திற்குள் பயணிகள் புகுந்தனர். பின்னர் நிலைய அலுவலர் ராஜரத்தினத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பயணிகளை நிலைய அலுவலர் ராஜரத்தினம் சமரசம் செய்தார்.

பின்னர் மாலை 6½ மணிக்கு மேல் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story