நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
கோஷங்கள்
இதில் நகர பொறுப்பாளர் மணிமாறன், மாநில நிர்வாகி நக்கீரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கணேசன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் பூபதி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் மோகன், மார்டின் கிறிஸ்டோபர் மற்றும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story