காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் ரெயில் மறியல், கடை அடைப்பு போன்ற தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஈவேரா, ஓய்வு பிரிவு அணி மாவட்ட செயலாளர் மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜோன்ஸ்ஐன்ஸ்டீன், மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாராயணன், ஸ்டாலின், வடுகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைபடுத்தும் குழுவை உடனடியாக அமைத்திட வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை காத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story