காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அதிகாரிகள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் போராட்டம் நடத்தினர்.
கரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூரில் நேற்று முன்தினம் தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 1,600-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் லைட்ஹவுஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கரூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோரிக்கையை வலியுறுத்தி ஜவகர் பஜாரில் தபால் நிலையம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கைக்காக கரூரில் வக்கீல்கள் நேற்று 3-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story