புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் பெண் கைது


புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் பெண் கைது
x
தினத்தந்தி 4 May 2018 11:14 PM GMT (Updated: 4 May 2018 11:14 PM GMT)

புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் மும்பை குர்லாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

புனே விமான நிலையத்தில் நேற்று அபுதாபியில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது, ரெஹகான பைசான் அகமது கான்(வயது30) என்ற பெண் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் வைத்திருந்த ஒரு பையில் அதிகளவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 3 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித் தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் மும்பை குர்லாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கம் கடத்தல் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story