மினிவேனில் கடத்தப்பட்ட 2,496 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


மினிவேனில் கடத்தப்பட்ட 2,496 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், மினி வேனில் 2,496 மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் திருவாரூர் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழனிவாசல் ரெயில்வே கேட் அருகே சென்ற ஒரு மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் 2 ஆயிரத்து 496 மதுபாட்டில்கள் காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

கைது

மேலும், விசாரணையில் வேனில் இருந்தவர்கள் கும்பகோணம் மேலக்காவிரியை சேர்ந்த கர்ணன் மகன் தீனதயாளன் (வயது 25), செல்வம் மகன் அஜீத்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், அஜீத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார், மதுபாட்டில்களுடன் மினி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story