‘நீட்’ தேர்வால், அண்டை மாநிலங்களில் தமிழக மாணவ-மாணவிகள் அகதிகள் போல அலையும் நிலை ஏற்பட்டுள்ளது
‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவ-மாணவிகள் அண்டை மாநிலங்களில் அகதிகள்போல அலையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மயிலாடுதுறையில் வைகோ கூறினார்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் ம.தி.மு.க. 25-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு நாகை மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் வீராசாமி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்றார். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர் களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘நீட்‘ தேர்வு
‘நீட்‘ தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு துணையாக சென்ற அவரது தந்தை மாரடைப்பால் இறந்த செய்தி அனைவரையும் பதற செய்துள்ளது. இனி அந்த மாணவனை டாக்டராக்க முடியுமா? ‘நீட்‘ தேர்வை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாக போராடினோம். ஆனால், அந்த தேர்வை மாநில அரசு எதிர்க்க தவறிவிட்டது. மேலும், தமிழக மாணவ-மாணவிகளுக்கு வெளி மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதையாவது தமிழக அரசு எதிர்த்து இருக்க வேண்டும். இந்த ‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவ-மாணவிகள் அண்டை மாநிலங்களில் அகதிகள்போல அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடமை தவறிய தமிழக அரசு, மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் குடும்பத்திற்கு உதவி செய்வதாக கூறி, குற்றத்தில் இருந்து தப்பிக்க முயல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் செம்பனார்கோவில் கொளஞ்சி, அய்யப்பன், நகர பொருளாளர் ஜமீலுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story