கருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்..
ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கு ‘காதலர்கள்’ என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது.
காதலர்கள் திருமணம் செய்து கொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணைய வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிராசையாக்கும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சமூகத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, எல்லைமீறிய காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்தின் மையமாக இருக்கிறது.
காதலிக்க தூண்டுவது ஒரு ஹார்மோன் விளையாட்டுத்தான். ஆனால் அதை புரிந்து கொண்டு பக்குவமாகவும், பாதுகாப்பாகவும் காதலிக்கத் தெரிய வேண்டும். ‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்ல வேண்டும், அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்ய வேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்பக் கவலைக்கு உள்ளாகிறார்கள்.
கவனமாக கையாளவேண்டிய கண்ணாடி போன்றது பெண்களின் இளமைப் பருவம். சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும்தான். பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்' அவர்கள் அறிவை விசாலப்படுத்த வேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணர வேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். இடைவெளியை குறைக்கும் பெண்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடல் வழி பந்தம்’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும்.
பெற்றோர்களும், சமூகமும் சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது.
திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிவிடுகிறவர்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீர் கர்ப்பம் அவர்களை பலவிதங்களில் குழப்பி, அடுத்து என்ன செய்வது என்று சரியான முடிவினை எடுக்க முடியாத அளவுக்கு தயங்கவைத்துவிடுகிறது. எந்த மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல், தவறானவர்களிடம் போய் நின்று கொண்டு கொடூர கருக்கலைப்பிற்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.
பிரபல மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது:
“திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன்முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக்கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப் பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்க விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தேன்.
அவர்கள் நான் சொன்னதை கருத்தில் கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்து விட்டார்கள். அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கி விட்டார்கள்” என்கிறார், அவர்.
பெண்கள் தங்கள் உடலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எல்லைமீறமாட்டேன் என்ற உறுதியோடு நட்பையும், காதலையும் தூரத்தில் வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள்தான் அப் படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியாகிவிடும்போது அதில் சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. ‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடு கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம்கொடுக்காமல் இருப்பதே நல்லது
மனித ஜென்மம் மகத்துவம் நிறைந்தது. மனித உடல் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவே சமூகம் சில நியதிகளை வகுத்துவைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டு வாழ்வதே முறையான வாழ்க்கை. இஷ்டத்திற்கு வாழ்வது கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அப்போது கைகொடுக்கவோ, காப்பாற்றவோ யாரும் முன்வருவதில்லை.

Related Tags :
Next Story