கர்நாடக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கர்நாடக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 9:30 PM GMT (Updated: 19 May 2018 7:30 PM GMT)

கர்நாடக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அன்னூர்,

கர்நாடக மாநில கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னூர் பயணியர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்திரராஜன், ரங்கசாமி, விவசாய அணி மாநில செயலாளர் சின்னராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது காங்கிரசார் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும் கிடைத்தன. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்து ஜனநாயக படுகொலை செய்த கர்நாடக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் முருகேசன், கருப்புசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் நவின், அன்னூர் வட்டார தலைவர்கள் பொன்னுசாமி, தங்கம் பழனிச்சாமி, நகர தலைவர் கரீம்பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி. மனோகரன் முன்னிலையில் 50 பேர் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அப்போது அவர்களுக்கு துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story