மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது
குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கொட்டமிட்டா கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பீமன். இவரது மகன் அய்யப்பன் என்கிற மணிகண்டன் (வயது 32), பெயிண்டர். இவரது மனைவி சுமதி (28). இவர்களுக்கு ஜீவன் (8) என்ற மகனும், ஜீவிதா (6) என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டனின் தாயார் ராஜம்மாளின் தம்பி ஜெயக்குமார். இவரது மகன் வசந்தகுமார் (31), கோவையில் போர்வெல் லாரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார். வசந்தகுமாரும், மணிகண்டனும் உறவினர் என்பதாலும் வீடு அருகருகே உள்ளதாலும் சுமதியிடம் வசந்தகுமார் சகஜமாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் வசந்தகுமார், சுமதிக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கள்ளக்காதல் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தவறான உறவு வேண்டாம் என மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக வசந்தகுமாரிடம் பேசுவதை சுமதி நிறுத்திவிட்டார். அப்போது வசந்தகுமார் தன்னிடம் ஏன் பேசுவதில்லை எனவும், செலவு செய்வதற்கு மட்டும் நான் வேண்டும், இப்போது தேவை இல்லையா? என கேட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வசந்தகுமாரின் சகோதரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கே.வி.குப்பத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்துகொள்ள மணிகண்டன் தனது மனைவி சுமதியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
நேற்று காலையில் திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக மணிகண்டன் தனது மனைவி சுமதியுடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி வந்துள்ளார். அப்போது வசந்தகுமார் தனது சகோதரியின் திருமண வேலைகளை கவனிக்க உறவினரின் காரை எடுத்து கொண்டு குடியாத்தம் நோக்கி வந்துள்ளார். மோடிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மணிகண்டனும், சுமதியும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் இருந்தபடியே வழியில் வந்த உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக காரில் வந்த வசந்தகுமார் பார்த்து ஆத்திரம் அடைந்து உள்ளார். உடனே வேகமாக காரை மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரை ஏற்றி கள்ளக்காதலியை கொன்ற வசந்தகுமார் அங்கிருந்து நேராக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story