ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்களை தாக்கிய 5 பேர் கைது


ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்களை தாக்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2018 12:26 AM GMT (Updated: 20 May 2018 12:26 AM GMT)

ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி உயிரிழந்ததால் கோபம் அடைந்த அவரது குடும்பத்தினர் பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேரை பிடித்து தாக்கினர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தானே மும்ராவை சேர்ந்தவர் சனாவுல்லா கான் (வயது45). இவர் பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை சிகிச்சைக்காக குடும்பத்தினர் மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் கவனக்குறைவால் தான் அவர் இறந்து விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு பணியில் இருந்த பயிற்சி டக்டர் அதிஷ் பாரிக் மற்றும் பெண் பயிற்சி டாக்டரை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். வார்டையும் சூறையாடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பயிற்சி டாக்டர்களை தாக்கிய 5 பேரை பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில், நோயாளியின் உறவினர்களால் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. 

Next Story