கடலூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


கடலூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2018 3:00 AM IST (Updated: 21 May 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள தாழங்குடா சுனாமிநகரை சேர்ந்த ஏழுமலை மகன் அசோக்குமார்(வயது 21)நேற்று முன்தினம் காலை தனது நண்பருடன் தாழங்குடா கடரையோரம் உள்ள சவுக்கு தோப்பு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேவனாம்பட்டினம், கதிர்வேல் செட்டி தெருவை சேர்ந்த பலராமன்(வயது 32) என்பவர், அசோக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.600–ஐ பறித்தார். இது குறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவுசெய்து பலராமனை கைது செய்தனர். அப்போது பலராமனுக்கு கடலூர் முதுநகர் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதனை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதேபோல் கடலூர் முதுநகரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட கதிர்வேல் செட்டி தெருவை சேர்ந்த சதீஷ்(36) என்பவருக்கும் பஞ்சநாதன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story