துறைமுக வழித்தடத்தில் தடம் மாறிச்சென்ற மின்சார ரெயில் விசாரணைக்கு உத்தரவு


துறைமுக வழித்தடத்தில் தடம் மாறிச்சென்ற மின்சார ரெயில் விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் தடம் மாறிச்சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மும்பை, 

துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் தடம் மாறிச்சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தடம் மாறிச்சென்ற ரெயில்

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து பேலாப்பூர் நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரெயில் வடலா ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு கிளம்பி சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த ரெயில் பாந்திரா நோக்கி செல்லும் வழித்தடத்தில் தடம் மாறிச்சென்று கொண்டிருந்தது.

4 பெட்டிகள் பிளாட்பாரத்தை கடந்துவிட்ட நிலையில் தான், அந்த ரெயிலை இயக்கிய மோட்டார்மேனுக்கு ரெயில் தடம் மாறி செல்வது தெரியவந்தது.

விசாரணைக்கு உத்தரவு

இதனால் பதறிப்போன அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் அந்த ரெயில் கிங்சர்க்கிள் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. மின்சார ரெயில் தடம் மாறி சென்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரெயில் தடம் மாறி சென்ற இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story