தஞ்சையில் மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
தஞ்சையில், மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சை போலீஸ் பயிற்சி மையத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் 210 பேர் 7 மாதங்கள் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதேபோல் தஞ்சை, திருவையாறு, வல்லம் ஆகிய உட்கோட்டத்தில் 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு பயிற்சி முடித்த இரண்டாம் நிலை போலீஸ் காரர்கள் மற்றும் பயிற்சி பெறும் சப்-இன்ஸ்பெக்டர்கள் என்று மொத்தம் 310 பேருக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி அளிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சியில் இருந்து வந்த யோகா பயிற்சியாளர் ராமசாமி, 310 பேருக்கு நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி அளித்தார். இந்த யோகா பயிற்சி இனி வாரந்தோறும் 2 நாட்கள் நடைபெறும். விரைவில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ்காரர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Related Tags :
Next Story