துப்பாக்கி சூடு சம்பவம்: துணை போலீஸ் சூப்பிரண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஒவ்வொரு வழக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜா விசாரணை தொடங்கினார். அவர் கடந்த 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோசிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் இது போன்று துப்பாக்கி சூடு நடந்த அன்று பாதுகாப்பு பணியில் இருந்த ரமேஷ், தர்மலிங்கம் உள்ளிட்ட 4 துணை போலீஸ் சூப்பிரண்டு களிடமும், சிப்காட், தென்பாகம், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக் டர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.